×

துபாய் டென்னிஸ் தொடர்: ஸ்வியாடெக்-கிரெஜிகோவா பைனலில் இன்று மோதல்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-4,6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தினார்.

தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில் செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 1-6,7-5,0-6 என்ற செட் கணக்கில் கிரெஜிகோவா வெற்றிபெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் பைனலில், ஸ்வியாடெக்- கிரெஜிகோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Tags : Dubai Tennis Series ,Sviatek ,Krejikova , Dubai Tennis Series: Sviatek-Krejikova clash in final today
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்