சேலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் அதிகளவு நடக்கிறது. தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள், விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்களை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஆணையம், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விதிமீறல்களுக்காக இடைத்தேர்தல் நிறுத்தப்பட வேண்டும். அதிமுகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உட்கட்சி விவகாரம். உச்சநீதிமன்றத்தில் வந்திருக்கும் தீர்ப்பு தற்காலிகமானது என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். அதனால், அதிமுகவின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.