ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியும் அதிமுகவில் இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியும் அதிமுகவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? அவர் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் அதிமுகவில் இல்லை. இந்த தகவல் நாடாளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தேர்தல் கமிஷனில் உறுதியாகும். அதிமுக பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

* உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தேர்தல் கமிஷனில் உறுதியாகும்.

Related Stories: