தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் 30 நாள் ஆங்கில பயிற்சி

சென்னை: தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மார்ச் மாதம் முழுவதும் நடக்க உள்ளதால், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று ெதாடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை பெங்களூருவில் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு  பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை  பெங்களூருவில் உள்ள தென்னிந்தியாவுக்கான மண்டல ஆங்கில பயிற்சி மையம் அளிக்க உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில்  அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலப் பாடத்தில் திறமை பெற்ற ஆசிரியர்களை தவிர்த்து பிற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 75 ஆசிரியர்களை தெரிவு செய்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ஆகிய 13 மாவட்டங்களில் 30 ஆசிரியர்களும், மீதமுள்ள 45 மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து தலா 1 ஆசிரியர் வீதம் 45 ஆசிரியர்களுக்கு என மொத்தம் 75 ஆசிரியர்களை தேர்வு செய்து, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து deeksections@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: