×

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் புகுந்த சாரை பாம்பு: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதனால், அங்கு பணியில் இருந்து ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறையினர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் உட்புறம் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக நுழைவு வாயிலின் ஓரத்தில் திடீரென சாரை பாம்பு ஒன்று நுழைந்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றது. இதனை கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட்டனர். உடனடியாக, காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, பாம்பு அலுவலகத்திற்குள் நுழையாதவாறு கண்காணித்து வந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற 5 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து காப்புக்காட்டில் விட எடுத்துச் சென்றனர். தீயணைப்பு துறையினர் பிடித்த பிறகுதான் தெரிந்தது, அது 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு என தெரியவந்தது. அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாம்பு பிடிக்கப்பட்டது என்ற செய்தியை கேட்ட பிறகுதான் அலுவலக ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Tags : District Rural Development Agency ,Kanchipuram , A snake entered the office of the District Rural Development Agency in Kanchipuram: the employees ran screaming
× RELATED 100 சதவீதம் வாக்களித்தல் விழிப்புணர்வு...