×

சித்தாமூர் அருகே குளக்கரை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்: வருவாய் துறையினர் நடவடிக்கை

செய்யூர்: சித்தாமூர் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை நேற்று வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள சரவம்பாக்கம் ஊராட்சி கூட்ரோடு பகுதியையொட்டி குளம் உள்ளது. இந்த குளக்கரை பகுதியை ஆக்கிரமித்து 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் கட்டி 50 ஆண்டு காலத்திற்கு மேலாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் மூலம் இந்த குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15 கடைகள் மற்றும் 8 வீடுகளை காவல் துறையினர் பாதுகாப்போடு அகற்றினர்.

Tags : Chittamur , Removal of squatter settlements near Chittamur: Revenue department action
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்