×

தண்டலம் கிராமத்தில் அய்யப்பன் கோயிலில் பாலாலயம் விழா

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் அய்யப்பன் கோயில், விஹித பரமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் புனரமைப்பு பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பாலாலயம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, முன்னதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, முதல் கால பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு மூலவர், விநாயகர், அய்யப்பன், அம்பாள், சிவன் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Ayyappan temple ,Dandalam village , Balalayam ceremony at Ayyappan temple in Dandalam village
× RELATED கார் மோதி 3 பேர் காயம்