திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவிற்கான கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் மாசி மாதம் 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா இன்று காலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மார்ச் 6ம் தேதி திங்கட்கிழமை காலை வெள்ளித்தொட்டி உற்சவமும், பகல் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
