×

அமெரிக்கா, தென்கொரியாவிற்கு பதிலடி வடகொரியா ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை

சியோல்: கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, தென்கொரியாவிற்கு பதிலடி தரும் வகையில் வடகொரியா ஒரே நாளில் நீண்ட தூரம் சென்று தாக்கும் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் கூட தென்கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். இதனை போர் ஒத்திகையாக கருதுவதாக வடகொரியா எச்சரித்து இருந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் பதிலடி தரும் வகையில், வடகொரியா நேற்று அதிரடியாக 4 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வடகிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 3 மணி நேரம் பறந்து சென்றதோடு, 2000கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் என நிரூபித்தன. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது.

Tags : US ,South Korea ,North Korea , In response to US, South Korea, North Korea test 4 missiles in one day
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...