ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க வௌியுறவு அமைச்சர் பிளிங்கன் இந்தியா வருகை

வாஷிங்டன்: அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் மார்ச் 1ம் தேதி இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்றது. அதன்ஒரு பகுதியாக ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்‘ என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் 200 கூட்டங்களை நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் நீட்சியாக, டெல்லியில் வரும் மார்ச் 1ம் தேதி அனைத்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் 3ம் தேதி வரை ஆண்டனி பிளிங்கன் இந்தியாவில் தங்கி இருப்பார். இந்த வருகையின்போது, இந்திய அதிகாரிகளை சந்திக்கும் அவர், நிலையான வளர்ச்சி, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, உலகளாவிய சுகாதாரம், மனிதாபிமான உதவிகள், பேரழிவு காலத்தில் மீட்பு, நிவாரண ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் பேச்சு நடத்துவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: