×

எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தர பொதுச் செயலாளராக்க அதிமுக பொதுக்குழு அடுத்தமாதம் கூடுகிறது: தேர்தல் ஆணையத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் அணி தீவிரம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவை அடுத்த மாதம் கூட்ட எடப்பாடி பழனிச்சாமி அணி திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற அதிமுக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதன் பிறகு மார்ச் 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் எதிர் பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் எப்போது நடத்தலாம் என்று அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அநேகமாக அடுத்த மாதம் 2-வது வாரம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அதிமுக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்தை அணுக அதிமுக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதிமுக தலைவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எந்த சட்ட சிக்கலும் எழ வாய்ப்பு இல்லை. அதற்கேற்ப அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளனர். இரு தரப்பினரும் சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

Tags : AIADMK general committee ,Edappadi Palaniswami ,permanent general secretary ,O. Panneerselvam , AIADMK general committee to meet next month to make Edappadi Palaniswami permanent general secretary: O. Panneerselvam's team serious about seeking Election Commission
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...