×

கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியை தடுத்தனவா?: ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது.. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: கார்ல் மார்க்கின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. கார்ல் மார்க்சு எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பா.ம.க.வின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர். கார்ல் மார்க்சு குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்சு குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Karl Markle ,Governor ,Bamaka ,Ramadas , Karl Mark, Indian Development, Governorship Defamation, Ramadoss
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து