×

குறைந்த இன்னிங்ஸ்களில் விளையாடி 800 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனை படைத்தார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரானபோட்டியில் 184 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர்  ஹாரி புரூக் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் விளையாடி 800 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சாக் கிராலி 2, பென் டக்கெட் 9 ரன்னிலும் பின்னர் வந்த ஒல்லி போப் 10 ரன்னிலும் அவுட் ஆகினர். 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஜோரூட்- ஹாரி புரூக் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹாரி புரூக் 107 பந்தில் சதம் விளாசினார்.

65 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்திருந்தபோது மழையால் போட்டி தடைபட்டது. அப்போது புரூக் 184(169பந்து, 24பவுண்டரி, 5 சிக்சர்), ஜோ ரூட் 101 (182பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். ஹாரி புரூக் மூலம் 184 ரன்கள் குவித்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் விளையாடி 800 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதேபோல் 9 டெஸ்ட் இன்னிங்ஸில் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (780 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (778 ரன்கள்), எவர்டன் வீக்ஸ் (777 ரன்கள்) போன்ற ஜாம்பவான்களை ஹாரி ப்ரூக் முந்தியுள்ளார்.

Tags : England ,Harry Brooke , England's Harry Brooke became the first player to score more than 800 runs in the shortest innings.
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை