காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

ராய்ப்பூர்: காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக இந்த கூட்டம் கூடியுள்ளது. முதல் நாளான இன்று காணிக்ராஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸின் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய, காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்க ஒருமனதாக முடிவு செய்தது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். காங்கிரஸ் சிறப்பு மாநாட்டு முடிவு பற்றி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை தேர்தல் மூலம் முடிவு செய்ய வேண்டுமா என்ற கருத்துக் கேட்கப்பட்டது. காங்கிரஸ் வழிகாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தமது கருத்துகளை எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதனிடையே, ராய்ப்பூர் மாநாடு காங்கிரஸுக்கு வழிகாட்டும் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: