×

வருசநாடு அருகே மேகமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்-வனத்துறையினர் ரோந்து பணி தீவிரம்

வருசநாடு : வருசநாடு பகுதி மலைக்கிராமங்களில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தேனி மாட்டத்தில், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.
குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பெரும்பாலான மலைக்கிராமங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடமலை- மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது, இந்த வனப்பகுதி வருசநாடு, கண்டமனூர், மேகமலை, என மூன்று வனச்சரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் மான், கரடி, புலி சிறுத்தை, யானை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளனர். மூல வைகை ஆறு இந்த வனப்பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளிமலை- அரசரடி வனப் பகுதியில் போதிய அளவில் தண்ணீர் இல்லை.

இதனால் வனப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது. எனவே, வனவிலங்குகள் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தது. குறிப்பாக காட்டு யானைகள் நீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்றது. இதனால் கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை அரசரடி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. யானைகள் அனைத்தும் சாலையில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு செய்து வருவதாகவும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் மேகமலை மற்றும் வருசநாடு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளி மலைப்பகுதியில் பலத்த சாரல் மழை பெய்தது. அதன் காரணமாக மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த புற்கள் மரங்கள் செழிப்படைந்தது.

மேலும் கடந்த சில நாட்களாக வெள்ளிமலை அரசரடி பொம்மராஜபுரம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசரடி கிராமத்தில் தேனி வெள்ளிமலை சாலையில் காட்டு யானைகள் ஒன்று உலா வந்தது. இந்த சாலை வழியாக மலைக்கிராம மக்கள் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வெள்ளிமலை சாலையில் செல்லும் வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவித்திருக்கின்றனர். மேலும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ‘‘மனித உயிர்களை பாதுகாப்பது விலங்குகளை பாதுகாப்பதே எங்களின் அயராத பணியெனவும் வனத்துறையினர் தெரிவித்தனர் இதனால் இரவு பகலாக மலைப்பகுதிகளில் குடிசைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

Tags : Megamalai forest ,Varasanadu , Varusanadu: The problem of wild animals including wild elephants is increasing day by day in the hilly villages of Varusanadu.
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது