×

பனிபொழிவால் முருங்கை விவசாயம் பாதிப்பு: விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண்துறை சார்பில் சிறப்புப் பயிற்சி

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பனிபொழிவால் பாதிக்கப்பட்டுள்ள முருங்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கருக்கு முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலம் இங்கு நீடித்த பனிபொழிவால் முருங்கை மரத்தின் குருத்து பகுதிகளை தேயில்லை கொசுக்கள் தாக்கி அவை காய்ந்தன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சமீபத்தில் வேளாண் அதிகாரிகள் முருங்கை தோட்டத்தை ஆய்வு செய்திருந்தனர். இந்த நிலையில் ஈசநத்தம் பகுதியில் வேளாண் துணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில் கிராம அளவிலான பண்ணை மகளிர் மற்றும் ஆடவருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முருங்கை மரத்தை நோய் தாக்காமல் தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.     



Tags : Moringa ,Department of Agriculture , Snowfall, Moringa, Impact, Agriculture, Training
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்