சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 51.31 லட்சம் ரொக்கமும் ரூ.11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மற்ற பொருட்களின் மதிப்பு ரூ.1.33 லட்சம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
