×

சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவையில் பிப். 27 முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியால் ரயில் சேவையில் பிப்ரவரி 27 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

* இந்தூர் - கொச்சுவேலி விரைவு ரயில் (22645) பிப்ரவரி 27ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

* ஆலப்புழை - தன்பாத் - ரயில் (13352) மார்ச் 2ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

* தன்பாத் - ஆலப்புழை ரயில் (13351) பிப்ரவரி 27ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழி இயக்கப்படும்.

* தன்பாத் - ஆலப்புழை ரயில், கொச்சுவேலி - கார்பா மற்றும் இந்தூர்  -  கொச்சுவேலி ரயில்கள் சென்னை சென்ட்ரலில் நிற்காது.

* கொச்சுவேலி - கார்பா ரயில் (22648) மார்ச் 2ல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.

* பாலக்காடு - சென்னை சென்ட்ரல் ரயில் (22652) பிப்ரவரி 28ல் திண்டுக்கல், விழுப்புரம், எழும்பூர் வழியாக இயக்கப்படும்.

* பாலக்காடு - சென்னை ரயில் கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், மல்லூர், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டையில் நிற்காது.

* பிப்ரவரி 28ல் பாலக்காடு - சென்னை ரயில் காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பலூரிலும் நிற்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஈரோடு - சென்னை ஏற்காடு ரயில் ஆவடியுடன் நிறுத்தம்:

* இரவு 9 மணிக்கு புறப்படும் ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு ரயில் (22650) பிப்ரவரி 28ல் ஆவடியுடன் நிறுத்தப்படும்.

* இரவு 10.40க்கு புறப்படும் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் ரயில் (22650) பிப்ரவரி 28ல் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

கோவை, திருப்பதி ரயில்களின் நேரத்தில் மாற்றம்:

* காலை 6.10க்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் (12675) பிப்ரவரி 28ல் காலை 6.40க்கு புறப்படும்.

* காலை 6.25க்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் (16057) பிப்ரவரி 28ல் காலை 6.55க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Basin Bridge ,Vyasarpadi ,Railway ,Southern Railway , Basin Bridge - Vyasarabadi Railway, Train Service, Transfer
× RELATED சென்னை பேசின்பிரிட்ஜ்...