×

நாகாலாந்தில் பாஜக, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு உள்ளது: திமாப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

திமாப்பூர்: நாகாலாந்தில் பாஜக, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திமாப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், நாகாலாந்து பக்கம் திரும்பி பார்க்காமல் காங்கிரஸ் தலைவர்கள் கண்களை மூடி கொள்கின்றனர். வடகிழக்கில் சூழ்நிலைகள் மாறும் என 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றார். நாகாலாந்திற்கான எங்கள் மந்திரம், அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு. இதுவே பாஜக மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிப்பதற்கு காரணம். இன்று நாகாலாந்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி செய்தது போல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 8 மாநிலங்களை ஏடிஎம்களாக நாங்கள் கருதாததால் இப்படி நடக்கிறது. எங்களுக்கு 8 வடகிழக்கு மாநிலங்கள் அஷ்ட லட்சுமிகள் என கூறினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நாகாலாந்தை நோக்கியதில்லை, மாநிலத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. நாகாலாந்து அரசை டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோலில் காங்கிரஸ் எப்போதும் இயக்குகிறது. டெல்லி முதல் திமாப்பூர் வரை காங்கிரஸ் குடும்ப அரசியலில் ஈடுபட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், கோஹிமாவை ரயில்வேயுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. ரயில்வேயுடன் இணைக்கப்பட்டால், இங்கு வாழ்வதற்கும் வணிகம் செய்வதற்கும் எளிதாகும். சுற்றுலா முதல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் ஸ்டார்ட்அப்கள் வரை நாகாலாந்து இளைஞர்களுக்கு அரசு உதவுகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, திரிபுராவில் பாஜக ஆட்சி இருப்பதால், சட்டசபை தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டார்.

Tags : BJP ,NTPP ,Nagaland ,PM ,Narendra Modi ,Dimapur , Nagaland, BJP, NTPP, support, Prime Minister Narendra Modi
× RELATED வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்...