×

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை காரமடை வனப்பகுதியில் விட கிராம மக்கள் எதிர்ப்பு

கோவை : கோவையில் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானையை, காரமடை வனப்பகுதியில் விட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேட்டுப்பாளையம் மரக்கிடங்கு செக்போஸ்டில் வைக்கப்பட்டுள்ள ‘காலர் ஐடி’ பொறுத்தப்பட்டுள்ள யானையை, எங்கு விடுவது என வனத்துறை குழப்பம் அடைந்துள்ளனர்.

மக்னா யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நடமாடும் காரணத்தால் யானையை காரமடை வனப்பகுதியில் விட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் யானையை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து யானையை மேட்டுபாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளின் ஆலோசனை படி முடிவெக்கப்பட உள்ளனர்.

யானையை காரமடை வனப்பகுதிக்குள் விடும்பட்சத்தில் மீண்டும் அது ஊருக்குள் புகுந்துவிடும் என்ற அச்சம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே எழுந்துள்ளதால் யானையை எங்கு விடுவது என வனத்துறை குழப்பம் அடைந்துள்ளனர்.

Tags : Karamada , Villagers protest release of captured Magna elephant in Karamadai forest
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...