×

உக்ரைனில் போரை நிறுத்துங்கள்! அமைதியை நிலைநாட்டுங்கள்! : ரஷ்யாவிற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!!

நியூயார்க் : உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகும் என ரஷ்யா அஞ்சியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் போர் தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது ரஷ்யா. இந்த உக்ரைன் - ரஷ்யா போரினால் சுமார் 42 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், 57 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 15 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை மாநாடு நேற்று நியூயார்க்கில் நடந்தது. இது சிறப்பு கூட்டம் ஆகும். இந்த சிறப்புக் கூட்டத்தில் உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் அமைதி நீடிக்க ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான வாக்கெடுப்பின் போது, ​​141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 7 பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன., 32 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல், நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இதில் வாக்களிக்கவில்லை.

Tags : Ukraine ,Russia ,India , World map, Ukraine, Russia, UN General Assembly, Joe Biden
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...