அன்புஜோதி ஆசிரம இணையதளம் முடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி  ஆசிரமத்தில் தங்கிருந்த 11க்கும்  மேற்பட்டோர் காணாமல் போனதும், மனநல பாதிக்கப்பட்டவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும் என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட  9 பேர் கெடார் போலீசாரால் கைது செய்தனர்.

இந்நிலையில் , முண்டிம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பெண்களிடம் பாலியல் துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிதனியே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.இதனிடையே, ஆசிரமத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.anbujothiashram.org என்ற  இணையதளத்தை சிபிசிஐடி போலீசார் நேற்று முடக்கினர்.

Related Stories: