×

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சேலம் மாவட்டம், ஓமலூரை  சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்தார்.  

 இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது.  யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டுள்ளார். அரசு தரப்பு சாட்சிகளும், சான்றாவணங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளது என்று வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : Gokulraj , Judgment deferred in Gokulraj murder case: Court order
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்