மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த 31,591 அகதிகள் மிசோரமில் தஞ்சம்

அய்சால்: மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 31,591 அகதிகள் மிசோரமின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை  ஜனவரி 27ம் தேதி வரை 31,050ஆகவும், வங்கதேசத்தை சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 541 ஆகவும் உள்ளது.

லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள 8 கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் வங்கதேசத்தை சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த ராணுவ சதியை தொடர்ந்து சின் பிராந்தியத்தில் இருந்து  ஏராளமானவர்கள் மிசோரமுக்கு அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: