இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் பதிலடி கொடுக்குமா நியூசி.

வெலிங்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் ஆட்டம் இன்று வெலிங்டன்னில் தொடங்குகிறது. நியூசிலாந்தை சொந்த மண்ணிலேயே சாய்த்த உற்சாகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கி. அணி களமிறங்குகிறது. முதல் டெஸ்ட்டில் டக்கெட், ஒல்லி போப், ஹாரி புரூக், ஃபோக்ஸ், ஜோ ரூட், ஸ்டோக்ஸ்,  ராபின்சன் ஆகியோர் பேட்டிங்கிலும்,  ஆண்டர்சன், ஸ்டூவர்ட் , ராபின்சன்,  லீச் ஆகியோர் பந்து வீச்சிலும் செய்த அதிரடியை இந்த டெஸ்ட்டிலும் தொடர்வார்கள். அதிலும் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பு ஏற்ற பிறகு விளையாடிய 11 ஆட்டங்களில் 10ல் வெற்றி வாகை சூடியுள்ளது இங்கிலாந்து. அதனால் அந்த வெற்றியை தொடர இங்கிலாந்து முனைப்புக் காட்டும்.

டெஸ்ட் போட்டிகளில் நியூசி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. கடைசியாக விளையாடிய  இந்தியா, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான 5 தொடர்களில் ஒன்றில் கூட நியூசி வெற்றிப் பெறவில்லை. இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஒயிட் வாஷ் ஆன நியூசி மற்ற தொடர்களில் டிரா செய்துள்ளது. அதிலும் கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் ஆட்டங்களிலும் நியூசி தோல்வியைதான் சந்தித்துள்ளது. இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் தோற்ற சோக வரலாற்றை மாற்ற டிம் சவுத்தீ தலைமையிலான நியூசி அணி வேகம் காட்டும். ஆனால் அதற்கு முன்னாள் கேப்டன்கள் கேன் வில்லியம்சன், டாம் லாதம் ஆகியோருடன் பிரேஸ்வெல்,  ஸ்காட்,  கான்வே, முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய ஒரே வீரரான பிளெண்டெல், நெயில் வாக்னர், டிக்னர் ஆகியோர் கை கொடுக்க வேண்டும்.

Related Stories: