×

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புதிய கேப்டன் மார்க்ரம்

ஐதராபாத்: இந்தியாவின் ஐபிஎல் தொடரை போன்று  தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு ‘எஸ்ஏ-20’ டி20 கிரிக்கெட் தொடர் முதல்முறையாக அறிமுகமானது. அதன் 6 அணிகளையும், ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்திருக்கும் நிர்வாகங்கள் வாங்கி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு முடிந்த இந்த தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை  ஈஸ்டர்ன் கேப் சன்ரைசர்ஸ் அணி வென்று அசத்தியுள்ளது. இந்த அணியின் கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தென் ஆப்ரிக்க வீரர் ஆல்ரவுண்டர் எய்டன் மார்க்ரம்(28). அதில் ஒரு சதம் உட்பட 369ரன் குவித்ததுடன், 11 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னாள் சாம்பியன்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியின் 16வது தொடரில் சன்ரைசர்ஸ் அணியை மார்க்ரம் வழிநடத்த உள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான மார்க்ரம் இதுவரை தென் ஆப்ரிக்காவுக்காக  33 டெஸ்ட், 47ஒருநாள், 31 டி20 கிரிக்கெட் ஆ்ட்டங்களில் விளையாடி உள்ளார். மேலும் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான மார்க்ரம், 2022ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டிசம்பரில் நடந்த  மினி ஏலத்துக்கு முன்பு சன்ரைசர்ஸ் அணி மார்க்ரமை தக்க வைத்த போதே அவர் கேப்டன் வாய்ப்பில் உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது.

Tags : Markram ,Sunrisers Hyderabad , Markram is the new captain for Sunrisers Hyderabad
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...