×

ரிக்டரில் 6.8 ஆக பதிவு தஜிகிஸ்தான், ஆப்கானில் நிலநடுக்கம்

துஷான்பே: தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்மடைந்தனர். சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் எனும் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் பைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.0 ஆக பதிவானது. இந்த  நிலநடுக்கத்தால் மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்து கொண்டு சாலைகளில்  தஞ்சமடைந்தனர். பெரிய கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளானார்கள். 


Tags : Tajikistan ,Afghanistan , 6.8 Richter earthquake hits Tajikistan, Afghanistan
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி