×

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஈரோட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்

ஈரோடு: தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஈரோட்டில் அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சாபில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைமையிலான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பிரசாரம் செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு சி.என் கல்லூரி அருகில் உள்ள 22வது வார்டு பாரதிதாசன் வீதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

இதை தொடர்ந்து பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில், சி.என். கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை 24ம் தேதி மற்றும் நாளை மறுநாள் (25ம் தேதி) பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் வருகிற 25ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்தின் இறுதி நாளான அன்று தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி 25ம் தேதி காலை 9 மணிக்கு தனது பிரசாரத்தை துவக்கும் அவர் சம்பத் நகரில் பொதுமக்களிடையே வேனில் நின்றவாறு பேசி வாக்கு சேகரிக்கிறார்.
 
பின்னர் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சத்திரோடு, பஸ் ஸ்டாண்ட், மெட்ராஸ் ஹோட்டல், மஜித் வீதி வழியாக பொதுமக்களிடையே ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, கருங்கல்பாளையம் காந்திசிலை அருகே பொதுமக்களிடையே வேனில் நின்றவாறு காலை 10 மணிக்கு பேசுகிறார். கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று 11 மணிக்கு அக்ரஹாரத்தில் பேசுகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்கும் அவர் சம்பத் நகர், இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி வழியாகச் சென்று முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் படிப்பகம் அருகில் பேசுகிறார். பின்னர், அங்கிருந்து மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாகச் சென்று மாலை 3.45 மணிக்கு பெரியார் நகரில் பொதுமக்களிடையே பேசி தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Tags : Erot , With 3 days left for the election, political party leaders are actively campaigning in Erode
× RELATED கரூர்பரமத்தி அருகே ஈரோட்டை சேர்ந்த...