ஸ்ரீரங்கம் கோயில் அரையர் பெங்களூரில் பைலட்டாக தேர்வு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்திர வீதியை சேர்ந்த லட்சுமி நாராயணன் மகன் பரத்வாஜன்(எ)கிருஷ்ணன்(41). இவர் தனது 10வது வயதிலேயே நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை தந்தையிடம் முறைப்படி கற்று தேர்ந்தார். அதன்பின்னர் அவர்களது குல வழக்கப்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு அரை உத்திரம், ஆடிப்பூர சேவை செய்து வந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூரில் இருந்து பெருமாளுக்கு சேவை செய்து வந்தவருக்கு தற்போது விமான பைலட்டாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கோ பாஸ்ட் விமான நிலையத்தில் விமானியாக பணியாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பரத்வாஜன் கூறுகையில், பெருமாளுக்கு சேவை செய்வது எங்களது உயிர் மூச்சு. பைலட்டாக வேண்டும் என்ற உத்வேகம் வந்ததற்கு திருமங்கை ஆழ்வார் தான் காரணம். இதற்காக 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் பைலட் பயிற்சி பெற்றுள்ளேன். இப்போது பைலட்டாக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர இருக்கிறேன். எனது பணி நேரம் தவிர்த்து கிடைக்கும் நேரத்தில் அரையர் சேவையை தொடர்ந்து செய்வேன் என்றார்.

Related Stories: