ஆதிபராசக்தி கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி: கல்பாக்கம் விஞ்ஞானிகள் துவக்கி வைத்தனர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி  பொறியியல் கல்லூரி இணைந்து, அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி மற்றும் பயிலரங்கம் கல்லூரி அரங்கில் 3 நாட்கள் நடக்கிறது. துவக்க விழாவுக்கு, கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, கல்லூரி டீன் ராமசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில், இந்திராகாந்தி அணுமின் நிலைய  தலைமை அறிவியல் தகவல் வளம் பிரிவின் விஞ்ஞானி ராஜேஸ்வரி, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பொதுவிழிப்புணர்வு பிரிவின் தலைவர் ஜலஜா மதன் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கிய ட்ரோன்கள், மின் வாகனம், ரேஸ் வாகனம், பீரங்கி, எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்ட  அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம், எலப்பாக்கம், கயப்பாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பயிலரங்கில் பங்கேற்று கண்காட்சியை  கண்டுகளித்தனர். முடிவில், கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறை தலைவர் தயா நன்றி கூறினார்.

Related Stories: