×

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் ரூ.37,254 கோடி சரிவு: ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: தொழிலதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் ரூ.37,254 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 26-வது இடத்தில் கவுதம் அதானி தொடர்ந்தபோதிலும் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனமான அதானி குழுமம் மீது செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகரிப்பது, தவறான அறிக்கையை தருதல், வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகள் குறித்து அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.

இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்பப் பெற்றதால் மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்தது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில்  கவுதம் அதானி 26வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதானியின் சொத்து மதிப்பு இன்று மேலும் ரூ.37,254 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.23,139 கோடி குறைந்த நிலையில் இன்று ரூ.37,245 கோடி குறைந்தது.

Tags : Gautam Adani ,Forbes , Gautam Adani's net worth fell by another Rs 37,254 crore today: Forbes
× RELATED பைஜூஸ் அதிபர் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு: ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியீடு