×

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2நாட்களுக்கு அதிகபட்சவெப்பநிலை 33முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Puducherry, Tamil Nadu ,Meteorological Department , Temperatures in Puducherry, Tamil Nadu will be 3 degrees Celsius above normal: Meteorological Department
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?