தஞ்சை: அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்; ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்க்கு முழுமையாக கிடைத்த வெற்றி இல்லை.
அடுத்து நாங்க என்ன பண்ணப்போறோம்-னு WAIT AND SEE. தீர்ப்பு எங்களுக்கு பாதகமானதும் கிடையாது, சிவில் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்குவோம். சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம், தீர்மானங்களை எதிர்த்து முறையிடுவோம் இவ்வாறு கூறினார்.