உடுமலை பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் பயணிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை: உடுமலை பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் பயணிகள் அவதிப்படுகின்றனர். உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓட்டல் மற்றும் பேக்கரி கழிவுநீரை முறையாக வெளியேற்றாததால் பேருந்து நிலையத்தில் தேங்கி வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், பேருந்துகள் வரும்போது டயரில் பட்டு பயணிகள் மேல் கழிவுநீர் தெளிக்கிறது. காலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சீருடையில் கழிவுநீர் தெளிப்பதால் வேதனை அடைகின்றனர். நகராட்சி அதிகாரிகள் இதை கண்காணித்து, கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: