டெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையில் இருந்து ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.80,000 மதிப்புள்ள ஜீன்ஸ், விலை உயர்ந்த ஷூக்கள், ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் சுகேஷ் சந்திரசேகர் உள்ளார்.