சென்னை: பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்யமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் தவிர யார் அதிமுகவுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என ஜெயக்குமார் கூறினார்.
