×

ட்ரோன் மூலம் மக்னா யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்: யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு

கோவை: தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திவரும் மக்னா யானையை ட்ரான் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேன் வயல் புலி வயல் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குல் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், குடியிருப்பு பகுதிக்குள் நடமாடிவரும் மக்னா யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்த வந்தனர்.

விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கபட்டுள்ளன. இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடங்கியது.

ஆனால் இரவு நேரத்தில் மட்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்னா யானை பகல் நேரங்களில் அடர்ந்த புத்தர் நிறைந்த பகுதியில் சென்று மறைந்துவிடுகிறது. இதனால் இந்த யானையை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த மக்னா யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Magna ,Kumkis , Drone camera, magna elephant, forest department, 2 kumkis are invited
× RELATED மக்னா யானை தாக்கி காயமடைந்த தொழிலாளிக்கு கம்பம் எம்எல்ஏ ஆறுதல்