×

தர்மம் வென்றது.. மக்களின் தீர்ப்பால் பழனிசாமி முதல்வர் ஆவார் : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து!!

சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில்,கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அவை பின்வருமாறு,

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சிறப்பாக பணியாற்ற மிகப்பெரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: அதிமுக வழக்கில் தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி : பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் வென்று உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி : உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம், தலைவணங்குகிறோம்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் : உச்சநீதிமன்ற தீர்ப்பு, தெய்வ வாக்கு.மக்களின் தீர்ப்பால் மீண்டும் ஈபிஎஸ் முதல்வர் ஆவார்.எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் ஈபிஎஸ் என புகழாரம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர். நியாயமான தீர்ப்பு வந்துள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் :உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, மகிழ்ச்சியான தீர்ப்பு. ஓபிஎஸ் சசிகலா, டிடிவியை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்   


Tags : Darma ,Palanisami ,Chief Minister , AIADMK, Ministers, Edappadi, Palaniswami
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...