×

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை: சென்னையில் சவரன் ரூ.240 சரிந்து ரூ.41,960-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் சற்று ஆறுதல்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் உலோகம். நம் நாட்டில் ஆபரணங்களாக அணிவதற்காக விரும்புவது முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் உலகம் முழுவதுமே தங்கத்திற்கு தனி மதிப்பு உண்டு. அதற்கு உலகத்தில் கரன்சிக்கு அடுத்தபடியாக தங்கம் தான் சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது. பணக்காரர்கள் முதல் பாமரர் வரை தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணம் அதனை உடனடியாக பணமாக மாற்ற முடியும் என்பது தான். இதுதவிர சர்வதேச பொருளாதார சூழலில் பதற்ற நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி  வருவது நடுத்தர குடும்பத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Savaran ,Chennai , Continually decreasing jewelery prices: Savaran falls by Rs.240 to sell at Rs.41,960 in Chennai.. A little consolation for jewelery lovers..!!
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...