×

.காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை இதய உறுப்பு மாற்று சிகிச்சையால் மறுவாழ்வு பெற்ற 63 வயது முதியவர்: மருத்துவ குழுவுக்கு செயலாக்க இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் பாராட்டு

சென்னை: காவேரி மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை மருத்துவரும், சுழற்சி ஆதரவு சேவை நிபுணருமான டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: சென்னை காவேரி மருத்துவமனை, இதய அதிர்ச்சியுடன் ஒரு சிக்கலான மருத்துவ வரலாற்றை கொண்டிருந்த 63 வயதான முதியவர் ஒருவருக்கு இதய உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடுமையான மார்பு வலி ஏற்பட்டதற்கு பிறகு உள்ளூர் மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு 63 வயதான முதியவர், சுவாச சிரம பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 10% க்கும் குறைவாகவே இருந்தது. “இதய மீட்பு செயல்திட்ட வசதி” இருப்பதால், அவர் உயிரை காப்பாற்றுவதற்கும் மற்றும் மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் உள்பட, உடலின் பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும் இம்பெல்லா சாதனம் உடனடியாக பொருத்தப்பட்டது. இவருக்கு பொருத்தப்பட்டிருந்த இம்பெல்லா சாதனம் சிறப்பாகவே செயலாற்றியது.தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினரால் முதியவர் பரிசோதிக்கப்பட்டார்.  

இதய உறுப்புமாற்று சிகிச்சை அல்லது உரிய நேரத்திற்குள் தானமாக பெறப்படும் இதயம் கிடைக்கப் பெறவில்லை எனில், உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாக நிரந்தர இடது இதய கீழறை உதவி சாதனம் பொருத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு நாளுக்கு முன்னதாக, தானம் அளிக்கப்பட்ட ஒரு இதயம் இவருக்கு கிடைக்கப் பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது உடல்நலத்தோடு நன்றாக இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், ‘‘காவேரி மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவர்களின் மிகச்சிறந்த நிபுணத்துவமும் இணைந்திருப்பதால், 63 வயதான முதியவருக்கு மறுவாழ்வை வழங்கியிருக்கிறது. இதற்காக, இதய மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் குமுத் திட்டால், முதுநிலை இதயவியல் இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் அனந்தராமன் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை பிரிவு மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சைப் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா மற்றும் மருத்துவ குழுவினரினருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Kaveri Hospital ,Aravindan Selvaraj , Kaveri Hospital, Successful Treatment, Heart Transplantation, Rehabilitation, Elderly
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...