×

அறநிலையத்துறையின் ஆன்மிக பயணம் முதல் அணியில் 67 பேர் காசிக்கு புறப்பட்டனர்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் ஆன்மிக பயணத்திற்கான முதல் அணியில் 67 பயனாளிகள் நேற்று காசிக்கு புறப்பட்டனர்.இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலும் ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, தகுதி வாய்ந்த 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, 3 அணிகளாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதில் முதல் அணி நேற்று (பிப்.22) சென்றுள்ளனர். இரண்டாம் அணி மார்ச் 1ம் தேதியன்றும், மூன்றாம் அணி மார்ச் 8ம் தேதியன்றும் புறப்படுகின்றனர்.

இந்த ஆன்மிக பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையிலும் ஒவ்வொரு அணியிலும் சிறப்பு அலுவலர்களாக அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், மருத்துவர் மற்றும்  பணியாளர்கள் உடன் செல்கின்றனர்.ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 பயனாளிகள் நேற்று காலை ராமேஸ்வரத்திற்கு வந்து அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பேருந்துகள் மூலம் விழுப்புரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இன்று காலை புறப்படும் வாரணாசி விரைவு ரயில் மூலம் காசிக்கு புறப்படுகின்றனர். இந்த ஆன்மிக பயணத்தின் முதல் அணியினர் காசியிலிருந்து 26ம் தேதி இரவு புறப்பட்டு 28ம் தேதி ராமேசுவரத்திற்கு வந்து ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்து பயணத்தை நிறைவு செய்கின்றனர்.


Tags : Khasi , Department of Charities, Spiritual Journey, First Team, 67, left for Kashi
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு