×

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது தவறு: அதிபர் பைடன் பேட்டி

வார்சா: அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு இழைத்து விட்டது,’’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் ஓராண்டை கடக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் பைடன் அறிவிக்கப்படாத பயணமாக கடந்த திங்கட்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். இதனிடையே, உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவை அழிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகள் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இந்நிலையில், போலந்து தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களை சந்தித்த பைடன், ``அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு செய்து விட்டது,’’ என்று கூறினார்.


Tags : Russia ,President ,Biden , Nuclear Arms Treaty, Russia's Withdrawal Wrong, President Biden, Interview
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!