மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ராஜீவ் சிங் ரகுவன்ஷி நியமனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தரமான மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் பொறுப்பை வகிக்கும் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) தலைமை தாங்குகிறார். புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிப்பது, அதன் மருத்துவ ஆய்வுகளுக்கு அனுமதி தருவது ஆகியவை டிசிஜிஐயின் பொறுப்பாகும். டிசிஜிஐ ஆக பொறுப்பு வகித்த வி.ஜி.சோமணியின் பதவிக்காலம் கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய டிசிஜிஐ ஆக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் செயலாளரும் அறிவியல் இயக்குநருமான ராஜீவ் சிங் ரகுவன்ஷியை யுபிஎஸ்சி கடந்த மாதம் பரிந்துரைத்தது. அதை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய டிசிஜிஐ ஆக ரகுவன்ஷி நேற்று நியமிக்கப்பட்டார். இவர் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை இப்பொறுப்பை வகிப்பார்.

Related Stories: