×

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15%: சர்வதேச நிதிய இயக்குநர் கருத்து

வாஷிங்டன்: நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில், 3.4 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, ``உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும், உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது. நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் புதிய வாய்ப்புகள் மற்றும் வேலைகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் பொருளாதார நிலைக்கு அதன் நிதிக் கொள்கை ஆதாரமாக இருக்கிறது. சமீபத்திய நிதி நிலை அறிக்கையில், நிதி ஒருங்கிணைப்புக்கான அர்ப்பணிப்பு, மூலதன முதலீட்டுக்கான நிதியின் மூலம் இது தெரிய வருகிறது. இவை அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்,’’ என்று தெரிவித்தார்.


Tags : India ,Finance , Global Economic Growth, India, Contribution 15%, Director of International Finance, Comment
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...