×

வருமானவரி துறை சோதனை பிபிசிக்கு இங்கிலாந்து ஆதரவு: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்

லண்டன்: பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு மோடி தலைமையிலான பாஜ அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை ஒளிபரப்ப தடை விதித்தது. இதை தொடர்ந்து பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய ஐடி துறையின் ஆய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துக்கான நாடாளுமன்ற செயலாளர் டேவிட் ரூட்லி பதிலளித்து பேசினார்.

அப்போது, அவர் ``இந்தியா உடன் இங்கிலாந்து கொண்டிருக்கும் ஆழமான நட்புறவின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு பிபிசிக்கு ஆதரவாக நிற்கும். பிபிசிக்கு கருத்து சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். பிபிசிக்கு இங்கிலாந்து அரசு நிதி அளிக்கிறது. ஆனால் பிபிசி பாரபட்சமின்றி அரசு மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறது. அந்த சுதந்திரம் பிபிசிக்கு முக்கியமானது. எனவே, இந்திய அரசு உள்ளிட்ட உலக நட்பு நாடுகளுக்கு பிபிசியின் முக்கியத்துவத்தை உணர்த்த இங்கிலாந்து அரசு விரும்புகிறது,’’ என்று தெரிவித்தார்.



Tags : UK ,Income Tax ,BBC ,Union Govt , Income Tax Department, Audit, BBC, UK Support, Union Government, Strong Condemnation
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...