இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் துணை ஜனாதிபதிக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: அதிகாரிகள் தீவிர ஆலோசனை

சென்னை: துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், இரண்டு நாள் அரசு முறை பயணமாக  தமிழ்நாடு வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், அரசு முறை பயணமாக  வருகின்ற 28ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

அவர் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தமிழ்நாடு வரஉள்ள நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஆளுநரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, பொதுத்துறை அரசு செயலாளர் ஜகந்நாதன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன், பொதுத்துறை அரசு துணை செயலாளர் அனு, சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், ராணுவம், கப்பற்படை, காவல் துறை மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: