×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு: திமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகவும், தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாகவும் கொண்டாட திமுக மாணவரணி முடிவு செய்துள்ளது. திமுக மாணவரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள்  ஜெரால்டு, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்லாது, தமிழர்கள்  ஏற்றம் பெற்ற நாளாக கொண்டாடுவது. பிறந்தநாளையொட்டி மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி  ஊக்கப்படுத்துவது. புதுமை பெண் திட்டம், முதல்வரின் காலை உணவு  திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. டெல்லியில் ஏபிவிபி மாணவரணி அமைப்பானது தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Stalin ,Youth Rise Day ,Dizhagam , Decision to celebrate CM Stalin's birthday as youth uprising day: DMK student meeting resolves
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...