×

போட்டி தேர்வர்களுக்கு பிரத்யேகமாக ‘நோக்கம்’ என்ற செயலி அறிமுகம்: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தகவல்

சென்னை: அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சி துறை தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி காணொலிகளை பதிவேற்றம் செய்து வருகிறது.

இந்த காணொலி பாதையின் நீட்சியாக, இக்கல்லூரி போட்டி தேர்வுகளுக்கென்றே ‘செயலி’ ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘நோக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம், யுபிஎஸ்சி போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சி காணொலிகளை காண்பதோடு, அதற்கான பாடக் குறிப்புகளையும் இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சமே மாதிரி தேர்வுகள்தான். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும். ‘நோக்கம்’ செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சி காணொலிகளை காண்பதோடு, அதற்கான பாடக் குறிப்புகளையும் இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Anna , Introduction of app 'Nokkam' exclusively for competitive candidates: Anna Administrative Staff College Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்