×

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் ஜெய்சங்கர் தோல்வியடைந்து விட்டார்; காங். கடும் தாக்கு

புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் ராகுல்காந்தி குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். சீன பிரச்னை பற்றிய கேள்வி எழுப்பிய போது   ராகுல்காந்தியை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் நேற்று பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இதுபற்றி கூறியதாவது: ஒன்றிய வெளியுறவுத்துறை இப்போது ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தங்களைப் பெற பயன்படுத்தப்படுகிறது. மேலும் சீன பிரச்னை பற்றி கேட்டால் நாங்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், சீனா பெரிய பொருளாதாரம் கொண்டது. அவர்களுடன் சென்று சண்டையிட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.

இதைச் சொல்வதன் மூலம் அவர் இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க நாங்கள் தகுதியற்றவர்கள் என்று மக்களிடம் கூறுகிறார். இதன் மூலம் நமது இந்தியப் பொருளாதாரத்தின் நம்பிக்கையை உடைத்து, நமது ஆயுதப் படைகளின் வீரத்தை இழிவுபடுத்துகிறார். இது எந்த ஒரு வெளியுறவு அமைச்சரும்  செய்யாத ஒன்று. ஒட்டுமொத்தமாக அவர் தனது பதவியில் தோல்வி அடைந்து விட்டார். நீங்கள் உங்கள் அரசியல் எதிரிகளைத் தாக்கி பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் நமது தேசியப் பாதுகாப்பை பணயம் வைத்து இதைச் செய்யாதீர்கள். ஏனெனில் நாடு சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் புனிதமானவை என்றார்.


Tags : Jaishankar ,Kong , Jaishankar failed as Foreign Minister; Kong. Heavy attack
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்