பல்லடம் பேருந்து நிலையம் முன்பு உள்ள பானி பூரி கடையில் பணிபுரிந்து வரும் வட மாநில இளைஞர் மற்றும் தமிழ் இளைஞர்களிடையே மோதல்

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பானிபூரி கடையில் பணிபுரிந்து வந்த வட மாநில இளைஞரும், தமிழக  இளைஞர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் வட மாநில இளைஞர்   தலையில் காயம் ஏற்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பல்லடம் போலிசார் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி துரத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பல்லடத்தில் வட மாநில இளைஞரும், தமிழ் இளைஞர்களும் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: